பிரபல இயக்குனர் சங்கர், ‘ஜென்டில்மேன்’ படத்திற்கு முன்பே தனக்கு வந்த இயக்குனர் வாய்ப்பை வேண்டாம் என்று சொன்ன செய்திதான் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் சங்கர்தான். சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டவர் சங்கர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும்.

மேலும் இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் மேல் ஆன நிலையில், இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் சிந்தனை கருத்துக்கள், படத்தில் காட்டப்படும் இடங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.இப்போது சினிமாவில் ஷங்கர் இயக்குனர் மட்டுமல்லாமல் எஸ். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்

Advertisement

உதவி இயக்குனர்:

இயக்குனர் சங்கர் ஆரம்பத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக சினிமாவில் தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் சூரியன் படத்தை இயக்கிய பவித்திரன் இடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். அதற்குப் பிறகுதான் அவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

முதல் படம்:

அந்த வகையில் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘ஜென்டில்மேன்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் சங்கர். அதன் பின்னர் இந்தியன், முதல்வன், சிவாஜி, அன்னியன், எந்திரன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு 2.0 வெளியான நிலையில், தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் படு பிஸியாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இயக்குனர் எஸ்.ஏ. சி :

இந்நிலையில்தான் இயக்குனர் சங்கரை குறித்து அவரது குருவான இயக்குனர் எஸ் .ஏ. சி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதில், ஒரு உதவி இயக்குனர் என்றால் ஒரே இயக்குனருடன் ஐந்து முதல் ஆறு படங்கள் பணிபுரிவார்கள். அதன் பின்னர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அப்படியே சென்று விடுவார்கள். ஆனால், சங்கர் என்னுடன் ஐந்து முதல் ஆறு படங்கள் முடித்தவுடன் ஒரு தயாரிப்பாளர் என்னிடம், நல்ல இயக்குனர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்.

Advertisement

ஷங்கரை புகழ்ந்த எஸ்.ஏ. சி:

அப்போது நான் சங்கரின் பெயரை தான் பரிந்துரை செய்தேன். ஆனால், சங்கர் என்னிடம், ‘இல்லை சார் எனக்கு இன்னும் சில படங்கள் உங்களுடன் பணி புரிந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். அப்படியே அவர் அன்று அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதால்தான், இன்று தமிழ் சினிமாவில் வெற்றிக்கு மேல் வெற்றிகளை பெற்று பெரிய இடத்தில் இருக்கிறார்’ என பாராட்டியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

Advertisement