தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். மேலும்,நடிகர் சாந்தனுவை எல்லாருக்கும் தெரியும். ஏன்னா,இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதோடு சாந்தனு வேற யாரும் இல்லைங்க. இவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. பிறகு இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்களுக்கு இளைய தளபதி விஜய்யை ரொம்ப பிடிக்கும். அதோடு தீவிர ரசிகர் என்றும் சொல்லலாம். மேலும், சாந்தனு ரொம்ப நாளாகவே தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் தான் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் தளபதி 64. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் தளபதி 64 என்று கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். மேலும், நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் சாந்தனு அவர்கள் சினிமா துறையில் பிளாக் பஸ்டர் ஆக அமைந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போனது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பார்க்கையில்… பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் டைரக்ஷனில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் பாக்யராஜ் அவர்கள் என் மகன் ரொம்ப சின்ன பையனாக இருக்கிறான்.

இதையும் பாருங்க : பம்பு செட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.

Advertisement

இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் போகட்டும். அவன் பெரியவன் ஆகட்டும் அதற்கு பிறகு நடிக்கலாம் என்றும் கூறினார். ஆனால், பாய்ஸ் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது அனைவருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து ஷங்கர் தயாரிப்பில் ‘காதல்’ படத்தில் மீண்டும் சாந்தனுவை ஹீரோவாக நடிக்க கேட்டிருந்தார். ஆனால் பாக்யராஜ் அவர்கள் இது ரொம்ப சீரியஸ் ஆன கதையாக இருக்கு. மேலும்,இந்த படத்தில் ரொம்ப ட்ராஜடி வேற இருக்கு. இவ்வளவு பிரச்சனை இருக்கிற படத்துல நடிக்க வேண்டாம். அதோடு என் பையனோட முதல் படம் கமர்சியல் படமாக இருக்கனும் என அதையும் தட்டிக் கழித்து விட்டார். அதற்கு பிறகு அறிமுக இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் ‘சுப்ரமணியபுரம்; படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் சாந்தனுவையும், சசிகுமார் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு ஒரு இளம் நடிகரை வைக்க எவ்வளவோ போராடினார்கள். இப்போது தான் என் மகன் பெரிய பட்ஜெட் (சக்கரகட்டி) படத்தில் நடித்து வருகிறான். அதனால் இந்த படத்தில் வேண்டாம் என பாக்யராஜ் கூறினார்.

Advertisement

இப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களிலிருந்து சாந்தனு விலகி இருந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் தற்போது தளபதி 64 படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரி சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்தை பார்த்துட்டு சாந்தனு கோபமடைந்து கூறியது, “படம் பேரு எல்லாம் கரெக்ட் தான். ஆன, இங்க சொல்ற காரணம் சுத்த பொய். அவங்க பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தது போலவே பேசுவாங்க. இப்படியே சொல்லிட்டு வாங்க நீங்க எல்லாம் நல்லா வருவீங்க” என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் நடிகர் சாந்தனு தான் காதல், சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கிறார் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால், அதற்கான காரணம் தான் புரியவில்லை.

Advertisement
Advertisement