உன் படத்த பாத்து காச வேஸ்ட் பண்ணனுமா ? தன் படத்தை கேலி செய்தவருக்கு சாந்தனு கொடுத்த பதில்.

By Arun · 7/12/2021

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வந்தனர். அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : 'இதனால் தான் இவர் புகைப்படங்களை பதிவிடுவது இல்லை' - 10 ஆம் ஆண்டு திருமண நாளில் பாவனா பதிவிட்ட பதிவு.

அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் கொச்சையாக பேசாமல் மிகவும் தன்மையாகவே பதில் அளிப்பார் சாந்தனு. தற்போது இவர் 'முருங்கைகாய் சிப்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜர் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரித்து உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் சாந்தனு பல்வேறு விதமான புரமோஷன் கலை சமூக வலைத்தளத்தில் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில் 'ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம் மேதாவி அறிவைக்கொண்டு யாரும் இந்த படத்திற்கு வர வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கு இதைவிட வாழ்க்கையில் பல வேலைகள் இருக்கும். மற்றவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க, உங்களின் கவலைகளை மறப்பீர்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் பொழுதுபோக்கு படத்திற்கு நாங்கள் எங்களுடைய பணத்தை வீணாக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சாந்தனு 'அப்போ வீணாக்காதீர்கள் சிம்பிள்' என்று பதில் கொடுத்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full