விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.
ஆனால், மக்களின் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் என்றால் சிலரே இருப்பார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. ஆரம்பத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாம மக்களுடைய பேவரட் தொகுப்பாளர் என்று பாவனாவை சொல்லலாம்.
பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் இசை நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பாவனா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். ஆனால், இவரது கணவர் புகைப்படம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் தனது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர் பாவனா.
அப்போது தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில்,என்னுடைய பதிவுகளில் இவரை நீங்கள் எப்போதாவதுதான் பார்த்திருப்பீர்கள் அதற்கு காரணம் இவர் சமூக வலைதளங்கள் என்றாலே ஓடி விடுவார் நான் இவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.