லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
https://twitter.com/Doge_mamae/status/1349336304480227330
மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.
அதே போல இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்த ஷாந்தனுவின் கதாபாத்திரமும் கேலிக்கு உள்ளானது. படத்தில் வந்த பூனை கூட அதிக காட்சியில் வந்தது என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர்.
https://twitter.com/imKBRshanthnu/status/1350345803852730373
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை கேலி செய்பவர்களுக்கு சாந்தனு பதிலடி கொடுக்கும் விதமாக, மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் டே ஷோவை பார்த்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு , ஒரு சீனா, ஒரு முழு படமோ. இப்படிபட்ட ஒரு மிகப்பெரிய படத்தில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு சாதனை தான். அதை நினைத்து நான் பெருமையடைகிறேன். இந்த படம் மூலமாக நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.





