விஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.! குவியும் அனைவரின் பாராட்டு.!

By Rajkumar · 18/4/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல அஜித்திற்காக அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

அஜித் தற்போது 'தீரன்' புகழ் வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே அஜித்தின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை சமூகவலைதளத்தில் ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையும் படியுங்க : 2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை .! சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.! 

அதே தேதியில் தான் அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாடத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சாந்தனு அஜித் பிறந்தநாளுக்காக ஒரு விஷயம் செய்துள்ளார்.

https://twitter.com/imKBRshanthnu/status/1118560963156791296

அதாவது அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அஜித்தின் புகைப்படம் அடங்கிய டி - ஷர்ட்டை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர் மலேசிய அஜித் ரசிகர்கள். அந்த டி ஷர்ட்டுகளை விற்று கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளார்கள் என்று சந்தனு பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full