2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை .! சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.!

0
1115
Sai-pallavi

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் தனுசுடன் செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் படு வைரலாக பரவியது.

சாய் பல்லவி ப்ளஸ் என்றால் அவரது சிவந்த கண்ணம் தான். மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது. கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ‘ரோஸாஸியா’ ஒரு விநோதமான தோல் குறைபாடால் தான்.

- Advertisement -

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி எந்த ஒரு விளமபரத்திலும் இதுவரை நடித்தது இல்லை. இந்த நிலையில் பிரபல அழகு சாதன நிறுவனம் ஒன்று பெண்கள் பூசும் பெர்னஸ் கிரீம் விளம்பரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.

அந்த விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணமே செயற்கையாக யாரையும் வெள்லையாக்கிவிட முடியாது என்று சாய் பல்லவி நம்பினாராம் இதனால் செயற்கையான பொருட்களை மக்களிடத்தில் கொண்டு சென்று ஏமாற்றுவதில் சாய் பல்லவிக்கு துளியும் விருப்பம் இல்லை அவரது நெருங்கிய தோழி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement