அட, சாந்தனு மனைவி கிகிக்கு ஒரு அக்கா இருக்காங்களா - முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.

By Rajkumar · 3/7/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ நிகழ்ச்சிகளை மக்களுக்கு பிடித்தமான வகையில் கொண்டு செல்வதில் தொகுப்பளர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் ஆண் தொகுப்பாளர்களை விட பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். டிடி, பாவனா, ரம்யா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் பெண் தொகுப்பாளிகளின் லிஸ்டில் கிகியும் ஒருவர்.

தொகுப்பாளினி கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார்.

இதையும் பாருங்க : நான் ஒரு மணி நேரத்துக்கே இங்க இத்தனை லட்சம் வாங்குறேன் - லீக்கான ரவுடி பேபி, இலக்கியாவின் விபச்சார பேரம்.

இவர் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று கிகிக்கு மஹாலக்ஷ்மி என்ற அக்கா இருக்கிறார். சமீபத்தில் மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதையொட்டி தனது அக்காவுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை கிகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணதிற்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார் கிகி. மேலும், கிகி டான்ஸ் ஸ்கூல் என்று தனியாக நடன பள்ளி ஒன்றையும் வெற்றிகரமாக இயக்கி நடத்தி வருகிறார். அதே போல இவர்கள் இருவரும் இணைந்து யூடுயூபில் வெளியிடும் வீடியோக்கள் லைக்ஸ்களை குவித்துவிடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full