‘அவங்களுக்குள் சண்டை போட்டுக்கனும்’ மணிமேகலை-பிரியங்கா விவகாரம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சொன்னது

0
304
- Advertisement -

மணிமேகலை- பிரியங்கா விவகாரம் தொடர்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா குறித்த சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி கடந்த வாரம் தான் முடிந்தது. இதில் பிரியங்கா டைட்டில் படத்த்தை வென்றார். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். தொகுப்பாளர் பார்ட்டில் எல்லாம் அவர் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

மணிமேகலை- பிரியங்கா விவகாரம்:

இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. பின் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் இருந்தார்கள். ஆனால், சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருந்தார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார். அதே போல் பாவனி, டிஜே பிளாக், சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள்.

தொடர்ந்த சர்ச்சைகள்:

இதனால் கடுப்பான மணிமேகலை, பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியவர்களை சொம்பு என்று விமர்சித்து வீடியோ போட்டு இருந்தார். இப்படி இருவருக்கும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அதோடு குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி முடிந்துமே மணிமேகலை- பிரியங்கா விவகாரம் மட்டும் முடிந்தபாடு இல்லை. இந்த நிலையில் இந்த பிரச்சனையின் போது அங்கிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நடிகை சரண்யா பேட்டி:

இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பாண்டியன் ஸ்டோர் நடிகை சரண்யா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரச்சனையில் நிறைய பிரியங்கா உடைய பர்சனல் லைஃபை பற்றி பேசி கமெண்ட் செய்ததை பார்த்தேன். அதேபோல் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியவர்களை மணிமேகலை சொம்புகள் என்று விமர்சித்ததையும் பார்த்தேன். பிரியங்கா- மணிமேகலை இடையே ஏற்பட்ட சண்டைக்கு முழுக்க முழுக்க என்ன காரணம் என்பது யாருக்குமே தெரியாது.

சண்டை குறித்து சொன்னது:

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் தயாரிப்பு தரப்புடன் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர்களுக்குள்ளே சண்டை போட்டு இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நான் அங்கு தான் இருந்தேன். எந்த மாதிரியான சூழலில் மணிமேகலை இந்த முடிவெடுத்தார் என்பதை என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை. நான் அங்கே போனபோது அங்கு சூழல் சரியில்லை என்பது மட்டும் தெரிந்து கொண்டேன்.
மணிமேகலை- பிரியங்கா தான் இந்த பிரச்சினையை பேசி சரி செய்ய முடியும். மத்தபடி இதற்கு யாரும் தீர்வு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement