ஆரவ்,ஓவியாவாக மாறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.!காதலை சொன்ன நடிகை! இரவில் நடந்த ரகசியம்

By Ajju · 24/6/2018
விஜய் டிவியில் பாஸ் நிகழ்ச்சியில் எதற்கு பஞ்சாமிருக்கிறதோ இல்லையோ ரொமான்ஸ் மற்றும் காதலுக்கு பஞ்சமே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஓவியா மற்றும் ஆரவ் தான் லைம் லைட்டாக இருந்து வந்தனர். சென்ற ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஆரவ்- ஓவியாவை வைத்து தான் நிகழ்ச்சியின் முக்காவாசி எபிசோடுகளை நகர்த்தினர்கள். இவர்கள் இருவருக்கும் இடையை நடந்த காதல், மோதல் விடயங்களை பார்த்தே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூடுதல் ஆர்வத்தை காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் ஓவியா மற்றும் ஆரவாக இருக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கதக் கொண்டிருக்கின்றார். ஆனால், அந்த குறையை ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா தீர்த்து வைத்து விடுவார்கள் போல. நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு ஷாரிக் வாழ்க்கையை பற்றி சில முக்கிய முடிவுகளை எடுத்து கூறி யோசித்துள்ளார். இதனால் பிக் பாஸ் 2 வில் இவர்கள் இருவரது காதல் கதை ஹைலைட்டாக அமையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full