‘நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னனு தெரியாது, இதுல’ குஷ்பூவின் பதிவை விமர்சித்த ஷர்மிளா.

0
739
Sharmila
- Advertisement -

சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை ஒட்டி குஷ்பூ போட்ட பதிவை விமரித்து இருக்கிறார் நடிகை ஷர்மிளா. பி வாசு இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது, அதில் சின்னத்தம்பி திரைப்படம் இவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.இந்த திரைப்படம் 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த பிரபு மற்றும் குஷ்பூ ஆகிய இருவருக்கும் இந்த படத்திற்கு பின்னர் இப்படி ஒரு வெற்றி இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

குஷ்பூ போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நேற்றோடு 32 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் சின்னத்தம்பி படத்தின் போஸ்டர் ஒன்றையும் பிரபு மற்றும் பி வாசுவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பபதிவிட்டு ‘ சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

- Advertisement -

சின்னத்தம்பி படம் குறித்து சொன்னது:

என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜா அவர்களின் ஆன்மாவை கிளர்ந்தெழுக செய்த இசைக்காக என்றும் அவரை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளருக்கு பாலு அவர்களுக்கு எனது நன்றி. சின்னத்தம்பி படத்தில் எனது நந்தினியின் கேரக்டர் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்து உள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

விமர்சித்த குஷ்பூ :

குஷ்பூவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்தனர். மேலும், சின்னத்தம்பி 2 படம் எப்போது வரும் என்றெல்லாம் கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, குஷ்பூவின் இந்த பதிவிற்கு ‘நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னனு தெரியாதுன்னு சொல்லி ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தன் வசமாக்கிய ஒரு மாபெரும் காவியம்’ என்று கமன்ட் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஷர்மிளா பதிவிற்கு வரும் கமெண்ட்ஸ் :

ஷர்மிளாவின் இந்த பதிவை கண்ட பலர் ஷர்மிளாவிற்கும் ஆதரவும் எதிர்ப்புகளையும் காண்பித்து வருகின்றனர். மேலும், ஷர்மிளா ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருந்தும் ரோஜா சீரியலில் இவர் நடித்த போது அந்த சீரியலின் ஒரு காட்சியில் வெறும் முகமூடியை வைத்து முக மாற்று அறுவை சிகிச்சை சீனை எடுத்து இருந்தார்கள். அந்த வீடியோவை எல்லாம் பகிர்ந்து ஷர்மிளாவை கேலி செய்து வருகின்றனர்.

Advertisement