விஜய் 63 யில் வில்லனாக நடிக்கும் ஷாருக்கான்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

0
1451

இளைய தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய்,நயன்தாராவை தவிர இந்த படத்தில் யோகி பாபு, விவேக், ஆனந்தராஜ் இந்துஜா, ரோபோ ஷங்கர் மகள் என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஷாருக்கானை இயக்குனர் அட்லி சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின்போது விஜய் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது அதில் நீங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அட்லி, ஷாருக்கானிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஷாருக்கானும் சம்பாதித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதிலும் இவரது கதாபாத்திரம் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக சம்பளம் வாங்காத ஷாருக்கான் இந்தப் படத்தின் இந்தி மற்றும் அனைத்து வட மாநில காப்பிரைட் உரிமையை சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement