போஸ் கொடுத்துகொண்டு இருக்கும் போது சல்மான் கானுக்கு திடீரென்று முத்தம் கொடுத்த நடிகை – விட்ட கடிச்சி தின்னுடுவாங்க போலயே.

0
454
salman
- Advertisement -

ரம்ஜான் பண்டிகையின் போது போட்டோவிற்கு போஸ் கொடுத்து இருக்கும்போது நடிகை ஒருவர் சல்மான்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

சல்மான்கானின் திரைப்பயணம்:

பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சல்மானை பாம்பு கடித்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து விஷ முறிவு மருந்தை கொடுத்து சல்மான் கான் காப்பாற்றப்பட்டார்.

காட்பாதர் படத்தில் சல்மான்:

தற்போது இவர் மீண்டும் படங்களில் கலக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையின் கொண்டாட்டத்தின்போது நடிகை ஒருவர் சல்மான்கானை முத்தமிட்ட காட்சி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த ரம்ஜான் பண்டிகையை பாலிவுட் நடிகர்கள் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரம்ஜான் பண்டிகை வாழ்த்து:

அதில் சல்மான்கானும், ஷாருக்கானுக்கு தங்கள் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தார்கள். அந்த வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. நடிகர் ஷாருக்கானின் வீட்டுக்கு முன்பு ரசிகர்கள் குவிந்து இருந்தார்கள். பின் ஷாருக்கான் ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் ஸ்டைலிலேயே செல்பி எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் சல்மான்கானின் வீட்டுக்கு முன்பும் ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது.

சல்மான் கானை முத்தமிட்ட நடிகை:

தீபிகா படுகோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ரமலான் விருந்தளித்து இருந்தார்கள் என்று சல்மான் கூறியிருந்தார். மேலும், நடிகர் சல்மான் கானும் நடிகை Shehnaaz gillயும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார்கள். அப்போது ஆர்வமிகுதியில் நடிகை Shehnaaz gill, சல்மான் கானை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். இந்த புகைப்படம் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து Khan’s kabhi Eid kabhi diwali என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Advertisement