மீண்டும் சன் பிக்சர்ஸ்சுடன் கைகோர்த்த சிவகார்த்திகயேன்.! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

0
979
Sk16
- Advertisement -

சீமா ராஜா படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன்எஸ் எம் எஸ் , விஎஸ்ஓபி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று தலைப்பை வைத்து உள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் கூட வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

#SK16BySunPictures @sivakarthikeyan @pandiraj_dir

A post shared by Sun Pictures (@sunpictures) on

ராஜேஷ் இயக்கத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, இரும்புத்திரை போன்ற வெற்றி படங்களை கொடுத்த மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சிவகார்த்திகேயன் 16 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் சிவகார்த்திகேயனை வைத்து மேலும் வரை படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதே போல இயக்குனர் பாண்டிராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement