‘சித்ரா,சுஜிதா மாதிரி கட்டுப்பாட இருங்க’ நல்லதுக்கு அட்வைஸ் பண்ண ரசிகருக்கு சிவாங்கியின் திமிர் பதில்

0
292
- Advertisement -

ரசிகர் சொன்ன அறிவுரைக்கு சிவாங்கி கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மேலும், மூன்று சீசன்களாக கோமாளியாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது.

- Advertisement -

சிவாங்கி குறித்த தகவல்:

அந்த வகையில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதே போல சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார்.

சிவாங்கி நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து இவர் கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். அதோடு சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனில் சிவாங்கி குக்காக வந்து இருந்தார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அதோடு டாப் 5ல் சிவாங்கி இருந்தார். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன் சொன்ன அறிவுரை:

இது ஒரு பக்கம் இருக்க, சிவாங்கி அவர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று பிஸியாக இருந்தாலும் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவாங்கி அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடாதீர்கள். சித்ரா, ஜானகி என அவர்களைப் போல கட்டுப்பாட்டில் இருங்கள்.

சிவாங்கி பதில்:

அப்போதுதான் உங்களுடைய குரல் வளம் நன்றாக இருக்கும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இதை பார்த்த சிவாங்கி, நான் என்ன சாப்பிடணும்? சாப்பிட கூடாது? என்று எனக்கு தெரியும். உங்களுடைய அறிவுரை தேவையில்லை. உங்களுடைய வேலையை நீங்கள் பாருங்கள். எனக்கு எது பிடித்திருக்கோ அதை தான் நான் சாப்பிட முடியும். உனக்காக எல்லாம் நான் வாழ முடியாது என்று பேசி இருக்கிறார்.

Advertisement