நீ எப்போதும் அனைவருக்கும் செல்லப் பொண்ணு தான் – ஷிவாங்கிக்கு ஆறுதல் சொன்ன குக்கு வித் கோமாளி பிரபலம்.

0
763
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த சீசன் இறுதியில் ஷிவாங்கிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஷிவாங்கி, நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பொழுது அனைவரும் என்னை மிமிக்ரி செய்கிறீர்கள், இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, நடிக்கிறேன் என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், இன்று இந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்து உள்ளது என்று ஆனந்த கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி, “என்னை எனது குரலுக்காகவே பலர் கிண்டலடித்திருக்கிறார்கள். பாய்ஸ் என்னைப் பார்த்தால் ஒரு மாதிரி பேசுமே அந்தப் பெண்ணா என்றுதான் என்னைப் பார்ப்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாம் நாமாக இருப்போம் என்று நினைத்து தான் வந்தேன். இப்போது என்னை எல்லோரும் அவர்கள் வீட்டுக்குழந்தையாக பார்க்கிறார்கள். வெளியில் என்னைப் பார்க்கும் பெரியவர்கள் ஷிவாங்கி பிள்ளை என்று கூறி என் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கிறார்கள்.” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஷிவாங்கியின் இந்த விடியோவை கண்டு மனம் வருந்திய ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி பவித்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,செல்லமே நீ பலருக்கு ஒரு உதாரணம். நீ நிறைய இடம் செல்ல வேண்டும். நீ எப்போதும் அனைவருக்கும் செல்லப் பொண்ணு தான் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement