ரஜினி அரசியலுக்கு வரல, விஜய் அரசியலுக்கு வந்தால் – ஜெயிலர் புகழ் சிவராஜ்குமார் சொன்ன பதில்.

0
140
- Advertisement -

விஜயின் அரசியல் குறித்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் சிவராஜ்குமார், சுந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உட்பட பலர் கிஷன், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதோடு சில தினங்களுக்கு முன்பு தான் கேப்டன் மில்லர் படத்தினுடைய பிரீ- ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ், நடிகர் தனுசை புகழ்ந்து பேசி இருந்தார்.

- Advertisement -

கேப்டன் மில்லர் படம்:

அது மட்டும் இல்லாமல் கேப்டன் மில்லர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனுசுடன் சேர்ந்து நடனமும் ஆடியிருந்தார். அந்த வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், இன்று கேப்டன் மில்லர் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து சிவராஜ் குமார் பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் சிவராஜ்குமார் அளித்த ஒரு பேட்டியில், விஜய் அரசியல் குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு சிவராஜ் குமார், விஜய்க்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது.

சிவராஜ்குமார் அளித்த பேட்டி;

என்னுடைய நூறாவது பட விழாவுக்கு விஜய், சூர்யா இருவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள். அவர்களுடைய எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. கடினமாக உழைக்கக் கூடியவர். அவர் ஒரே இரவில் பிரபலமானவராக மாறவில்லை. சினிமாவில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி மெருகேற்றி நிறைய போராட்டங்கள் எல்லாம் எதிர்கொண்டு இருக்கிறார். தன்னுடைய ஸ்டைல், படங்கள் தேர்வு என எல்லாவற்றிலும் அவர் தன்னை செதுக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு விஜய், பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவிய வீடியோக்களை எல்லாம் பார்த்தேன்.

-விளம்பரம்-

விஜய் அரசியல் குறித்து சொன்னது;

எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் அரசியலுக்கு வருவது நல்லது தான். அந்த திறமை விஜய்யிடம் இருக்கிறது. அவர் தன்னை நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் மக்களுக்கும் பிடித்திருக்கிறது. பொதுவாகவே ஒரு பிரபலம் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தால் எதுக்கு அதெல்லாம் என்று கேட்பார்கள். ஆனால், விஜயின் அரசியல் வருகையை மக்கள் அப்படி எல்லாம் சொல்லவில்லை. அவர்கள் அதை எதிர்க்கவும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் என்று கூறியிருக்கிறார். இப்படி சிவராஜ்குமார் பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

சிவராஜ்குமார் நடித்த படம்:

மேலும், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் சிவராஜ் குமார் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்று சொன்னால். இதனை அடுத்து கேப்டன் மில்லர் படமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பாராட்டை பெற்று தரும் என்று கூறப்படுகிறது.

Advertisement