5 நிமிட cameoவிற்கே தெரிக்கவிட்ட கன்னட சூப்பர் ஸ்டார், புகழ்ந்து தள்ளிய தமிழ் ரசிகர்கள் – வீடியோ வெளியிட்ட ஷிவான்னா.

0
2407
Jailer
- Advertisement -

ஜெயிலர் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பீஸ்ட் என்ற படு தோல்வி படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இவரது கேமியோ ரோலால் ஜெயிலர் திரைப்படத்தை கன்னட ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கன்னடத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெற காரணம் இவர் தான். ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் என்று இருவரும் ஒரு மாஸான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஷிவராஜ்குமாரின் நடிப்பு பலரை கவர்ந்து இருக்கிறது.

- Advertisement -

அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மற்றும் மோகன் லாலும் மாஸ் காட்டிய நிலையில் இவர் சர்வ சாதாரனமாக ஒரு tissue paper டாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு வந்து கிளைமாக்ஸ் கட்சியில் ரஜினி மற்றும் மோகன் லால் மாஸையே மிஞ்சிவிட்டார். இவரது நடிப்பை கன்னட ரசிங்கர்கள் பாராட்டுவது ஆச்சரியமல்ல தமிழ் ரசிகர்களும் இவரது நடிப்பை பாராட்டி தள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்ப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராபுடன் இணைந்து நானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ், இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு நன்றி. ரஜினிகாந்துடன் நடிக்க எவ்வளவு பேர் காத்திருக்கையில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அன்பு என்றும் என் இதயத்தில் உள்ளது என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிவராஜ்குமார் மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். மேலும், கடந்த ஆண்டு மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் ஆவார். ராஜ்குமார் மற்றும் புனீத்திற்கு நிகராக இவருக்கு கர்னாடக மாநிலத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. அதே போல இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆக்ஷன் படங்கள் தான்.

இதனாலேயே இவர் கன்னடத்தில் ஒரு மாஸ் ஹீரோவாகவே திகழ்ந்து வருகிறார். இவரை கன்னடஅவ்வளவு ஏன் குறிப்பாக சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படமும் கன்னடத்தில் இவர் நடித்த படம் தான். தமிழில் பத்து தல படத்தை விட கன்னடத்தில் இவர் நடித்த மாப்டி திரைப்படம் படு மாஸாக இருக்கும். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு தற்போது தான் இவரது மாஸ் பற்றி தெரிந்து இருக்கிறது.

Advertisement