உயிருக்கு ஆபாத்தான நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர். சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கையேந்தும் குடும்பத்தினர்.

0
463
sivashankar
- Advertisement -

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதால் உதவுங்கள் என்று அவருடைய மகன் வேண்டுகோள் விடுத்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் இவரின் உடல்நிலை மோசமாகி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் பாருங்க : கடை திறப்பு விழாவில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்த யாஷிகா. ஆனா, வீட்டில் நல்லா தான நடந்து இருக்காரு. இதோ வீடியோ.

- Advertisement -

மேலும், இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டரின் மகன் சோசியல் மீடியாவில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள்.

என் தந்தையின் சிகிச்சைக்கு உதவ நினைத்தால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அஜய் கிருஷ்ணா (மகன்) 9840323415 என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் இப்படி பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இதன் மூலம் சினிமா தொழில் துறையினர் இவருக்கு உதவுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதோடு இவர் குணமடைந்து வரவேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement