காதல் கணவருக்கு மூன்றாம் திருமணம் செய்ய ‘குலா’ கொடுத்த சானியா மிர்சா – என்ன நடந்தது? விவரம் இதோ.

0
490
- Advertisement -

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். தனது ஆறு வயதிலேயே மும்பையில் விளையாட்டை பயின்றவர் சானியா மிர்சா. பின் இவர் டென்னிஸ் விளையாட்டில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்று இருக்கிறார். பின் இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து இருந்தார்கள்.

- Advertisement -

சானியா மிர்சா- சோயப் மாலிக் விவாகரத்து:

கடந்த 2018 ஆண்டு சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. அதோடு சோயிப் மாலிக் ஏற்கனவே Ayesha Siddiqui என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சானியா-மாலிக் தம்பதி தன் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது.

சானியா மிர்சா- சோயப் மாலிக் ப்ரச்சனை:

இது குறித்து பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் கூறியபோது , இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று இருக்கின்றனர். சானியா மிர்சா தனியாக தான் வசித்து வருகிறார். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்தச் செய்திக்கு இருவருமே பதிலளிக்கவில்லை. அதற்கேற்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பம் புகைப்படங்களை மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கினார்.

-விளம்பரம்-

சோயப் மாலிக்-சனா ஜாவேத் திருமணம்:

அதேபோல் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார். சமீபத்தில் சானியா மிர்சா சோசியல் மீடியாவில் புதிய பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது போல இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக சோயப் மாலிக், சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

நடிகை சனா ஜாவேத் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை. இவர் உறுதி தொலைக்காட்சியில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானி நடிகரும், பாடகரும் மற்றும் பாடலாசிரியருமான உமைர் ஜஸ்வாவை திருமணம் செய்து பிரிந்து விட்டார்கள். தற்போது இந்த திருமணம் நடிகை சனா ஜாவேத்துக்கு இரண்டாவது, சோயிப் மாலிக்கு மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர், மாலிக்கை விமர்சித்தும் சோனியா மிர்சாவிற்கு ஆதரவாகவும் பதிவு போட்டு வருகிறார்கள்.

Advertisement