‘நமது அன்பு பிரிக்க முடியாதது’- முதல் முறையாக நாக சைதன்யா மீதான காதலை வெளிப்படுத்திய சோபிதா துலிபாலாவின் பதிவு

0
346
- Advertisement -

சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், முதல் முறையாக நாக சைதன்யா மீதான காதலை வெளிப்படுத்தி சோபிதா துலிபாலா போட்டுள்ள பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் கௌதம் இயக்கத்தில் இவர் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுகு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின், இவர்கள் இருவரும் கடந்து 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக தனது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துகளும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் என்றும் பலரும் கூறியிருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:

இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் தான் நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

-விளம்பரம்-

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் மிக எளிமையாக நடத்தப்பட்டது. அதோடு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த நாள் தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, அதே நாளில் சோபிதா உடன் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாகச் சைதன்யா விரும்பி இருந்ததாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. பின், சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள்தான் வைரல் ஆகியும் இருந்தது.

சோபிதா துலிபாலா பதிவு:

இந்நிலையில், நடிகை சோபிதா முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யா மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், எனது அம்மா உனக்கு என்னவாக இருக்க முடியும். எனது தந்தை உனக்கு எந்த முறையில் உறவு. நீங்களும் நானும் சந்தித்தது எப்படி. ஆனால் அன்பில் நமது இதயங்கள், சிவப்பு பூமி மற்றும் கொட்டும் மழை போன்றவை. அதைப் பிரிக்க முடியாதவாறு கலந்துவிட்டது என்ற குறுந்தொகை நூலின் வாசகத்தோடு, நாகத் சைதன்யா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement