தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் பணம் கேட்டு நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர் பூர்ணாவுக்கு செல்போனில் அறிமுகமாகியுள்ளார்.

தான் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் என்றும், மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும், தற்போது தான் துபாயில் வசித்து வருவதாகவும் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன் பிறகு சிலமுறை அந்த நபர் செல்போனில் உரையாடி உள்ளார். பின் சில நாட்களுக்குப் பிறகு அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று சொல்லி கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று சொல்லி டிக் டாக் பிரபலம் வேறு ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.

Advertisement

ஆனால், பூர்ணாவிற்கு சந்தேகமாகவே இருந்தது. பிறகு பூர்ணா பெற்றோர் சிசிடிவி பதிவுகளை பார்த்து உள்ளார்கள். அதில் அந்த மர்ம நபர்கள் பூர்ணாவின் வீடு, கார், வீட்டில் வெளிப்புறப் பகுதி ஆகியவற்றை எல்லாம் போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்திருப்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது அன்வர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் அன்வர் மீது புகார் அளித்துள்ளனர்.

பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள். தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement