கமல் வெளியிடப்போகும் இன்றய குறும்படம் யாருக்கு ?

0
2142
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சூடு பிடிக்கும், அதற்கு முக்கிய காரணம் அன்று நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பார், வீட்டில் இருந்து வெளியேற்றம் நடைபெறும் அடுத்த முக்கிய காரணம் கமல் வெளியிடும் குறும்படம்.

-விளம்பரம்-

குறும்படம் என்றாலே வீட்டில் உள்ள அனைவருக்கும் நடுக்கம் ஏற்படும், ஏனென்றால் அவர்கள் மறைத்ததையும் புறம் பேசியதையும் அனைவர் முன்னிலையிலும் கமல் அதை தொலைக்காட்சியில் போட்டு காமிப்பார்.

- Advertisement -

ஓவியா மற்றும் ஜூலி விவகாரத்தில் கமல் ஒளிபரப்பிய குறும்படம் மெகா ஹிட். ஜூலியின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பார்வையாளர்களின் கை தட்டல்களே அன்று வெளியான குறும்படத்திற்கான சாட்சி.

oviya-kamalஅந்த வகையில் ஏற்று குறும்படம் வெளியானால் அது யாருக்காக இருக்கும் என்ன காரணத்திற்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு கூடி இருக்கிறது.

-விளம்பரம்-

raiza nominate gayathiri

ரைசா: 

ரைசாவிற்கான குறுப்படம் இன்று வெளியாவதற்கு வலுவான காரணம் உள்ளது. சென்ற வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் அவருக்குள் அதிக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சினேகனுடன் இணைந்து காயத்திரியை பற்றி சென்ற வாரம் முழுவதும் அவர் புறம் பேசினார். இந்த வாரம் தீடிர் மாற்றம் ஏற்பட்டு காயத்திரி மற்றும் ஆரவ்வுடன் இணைந்து சினேகன் பற்றி புறம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆரவ்:

அடுத்த வாய்ப்பு ஆறவிற்கு தான் உள்ளது. அவரின் அதிரடி மாற்றம் நேற்று வெளிப்பட்டது. சினேகனை மரியாதை குறைவாக அவன் இவன் என்று நேற்று அவர் பேசினார். அதை கமல் குறும்படமாக ஒளிபரப்ப வாய்ப்புள்ளது.

Snehan

சினேகன்:

ஆரம்பம் முதலே இன்று வரை அனைவரை பற்றியும் புறம் பேசியே பழகியவர் சினேகன். ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் புறம் பேசாமல் இவரால் இருக்க முடியாது. அவருக்கான குறும்படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

gayathiri

காயத்திரி:

காயத்திரி வெளியேற உள்ளதால் ஜூலிக்கு காண்பித்தது போல்  அவருக்கான குறும்படம் வெளியில் காண்பிக்கப்படலாம்

 

Advertisement