விசுவாசத்தில் கீர்த்தியும் இல்லை ஆத்திமிகாவும் இல்லை ! ஜோடி யார் தெரியுமா !

0
2537
visvasam-shraddha
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்க உள்ள அவரது 59 வது படமான ‘விசுவாசம்’ ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

visvasam

- Advertisement -

அஜித் மற்றும் சிறுத்தை சிவா இணையும் 4 வது படம் விசுவாசம். ஏற்கனவே கடின உழைப்பை அளித்து அஜித் நடித்த விவேகம் படம் ரசிகர்களின் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அஜித் சிவா கூட்டணியில் மற்றொரு படமா என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம் என்று எதிர்பாக்க படுகிறிது. ஆனால் படத்தின் ஹீரோயின் யார் என்று இன்னும் முடிவு செய்ய படாத இந்த நிலையில்.படத்தில் கீர்த்து சுரேஷ் நடிப்பார் என்று எதிர் பாக்க பட்டது ஆனால் அவர் நடிக்கப்போவது இல்லை என்று தெரிந்தது, ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.பின்னர் ஆத்மீக நடிப்பார் என்று எதிர் பாக்க பட்டது ஆனால் அவரும் அந்த படத்தல் இல்லையாம்.

Shraddha

Shraddha Srinath

சரி கடைசியில் யார் தான் நடிப்பார் என்று எதிர் பார்த்தால் விக்ரம் வேதாவில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை அணுகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.