இந்த வயதிலும் இப்படி ஒரு அம்மா சென்டிமென்டா அஜித்துக்கு. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சொன்ன ரகசிகம்.

By Rajkumar · 25/11/2019

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் தல அஜித். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் என்றும் இவரை சொல்லலாம். அதோடு தமிழகம் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் தல அஜித்துக்கு ரசிகர்கள் உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் அஜித்துடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ஷரதா ஸ்ரீநாத். இவர் சினிமா துறைக்கு வந்து நடித்த சில படங்களிலேயே அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகை ஷரதா ஸ்ரீநாத் வேற யாரும் இல்லைங்க 'விக்ரம் வேதா' படத்தின் கதாநாயகி. இவர் அதிகமாக கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் தான் நடித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அஜித் நடிப்பில் வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஷரதா அவர்கள் அஜித் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியத்தை பகிர்ந்து கொண்டார். மேலும்,பேட்டியில் அவர் கூறியது, எல்லோருமே சொல்வது போல அஜித் சார் ஒரு நேர்மையான மனிதன். அவரை மாதிரி ஒரு உன்னதமான மனிதனை பார்ப்பது மிக அரிதான விஷயம். அந்த அளவிற்கு நேர்மையான குணமுடையவர். ஆனால் இரும்பு மனிதர் போல இருக்கும் நம்ம தல அஜித் சாரிடம் கூட ஒரு குழந்தைத் தனம் உள்ளது என்பதை எனக்கு இப்ப தான் தெரிய வந்தது. மேலும், அந்த ரகசியம் இதுவரை யாருக்கும் தெரியாது என்று நான் நினைக்கிறேன். அது என்னன்னா, ஒரு நாள் படப்பிடிப்பில் எங்களுக்கு விடுமுறை கிடைத்தது.

இதையும் பாருங்க : இந்தியில் பேசுங்க என்று கட்டாயப்படுத்திய ஹிந்தி பத்திரிகையாளர். டாப்ஸி கொடுத்த பதில்.

நான் அஜித் சார் கிட்ட சென்று நாளை நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் நான் என் அம்மாவை பார்க்க செல்வேன். மேலும், அவருடைய மடியில் சில மணி நேரம் தூங்க வேண்டும் என்று குழந்தைத் தனமாக புன்னகைத்து சொன்னார் என ஷரதா ஸ்ரீநாத் கூறி உள்ளார். இப்படி பண்பும், அன்பும் உடையவர் தான் நம்ப தல அஜீத். இதனைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வரவிருக்கும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வருடம் தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த 'விசுவாசம், நேர்கொண்ட பார்வை' படம் இரண்டுமே பிளாக் பஸ்டர் படங்கள் தான்.

இதனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படம் வெற்றி படமாக அமைந்தது அடுத்து இந்த படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவருமே மீண்டும் இணைந்து அஜித் நடிப்பில் வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் அஜித் அவர்கள் இரு வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக அஜித் கடும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், வலிமை படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், தல அஜித் பற்றி ஏதாவது ஒரு சுவாரசியமான விஷயம் வந்தாலே போதும் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் பயங்கரமாக ஷேர் செய்து குஷி ஆகிவருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full