இந்தியில் பேசுங்க என்று கட்டாயப்படுத்திய ஹிந்தி பத்திரிகையாளர். டாப்ஸி கொடுத்த பதில்.

0
2024
tapsee
- Advertisement -

நீங்கள் ஹிந்தி நடிகை தானே!! அப்ப ஹிந்தியில் தான் பேச வேண்டும் என கேள்வி கேட்டவரை ஒரே பதிலில் வாயடைக்க வைத்தார் நடிகை டாப்ஸி. மேலும், தற்போது இந்த நியூஸ் தான் ட்ரெண்டிங்கில் போய்க் கொண்டு உள்ளது. தமிழில் ஆடுகளம்,ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை டாப்சி. இவர் தற்போது ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவலும் வந்தது. நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த ‘பிங்க்’ என்ற படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக டாப்ஸி மாறினார். அதனைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி பல படங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற 50 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை டாப்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளார். மேலும், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் உள்ள சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-
Image result for tapsee"

அப்போது அவரிடம் பல பேர் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு நடிகை டாப்சி அவர்கள் ஆங்கிலத்தில் பதில் கூறினார். அப்போது அங்கிருந்த ஒருவர் நீங்கள் இந்தி படம் நடிகை தானே, அதனால் இந்தியில் தான் பேச வேண்டும் என வற்புறுத்தினார். உடனே டாப்ஸி அவர்கள் அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்து உங்களுக்கு இந்தி புரியுமா??? என்று கேள்வி எழுப்பினார். மேலும்,அங்கு இருந்த பல பேர் எங்களுக்கு ஹிந்தி தெரியாது என்றும் கூறினார்கள். இதை பார்த்து தன்னுடைய பேச்சை மீண்டும் ஆங்கிலத்திலேயே கொடுத்தார் நடிகை டாப்ஸி. ஆனால், தொடர்ந்து அந்த நம்பர் டாப்சியை ஹிந்தியில் பேச கூறியதால், டாப்ஸி கொஞ்சம் கடுப்பாகி சட்டென்று நான் ஹிந்தி நடிகை மட்டுமல்ல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறேன். அப்படி பார்த்தால் நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் பேசட்டுமா? என கேட்டார்.

இதையும் பாருங்க : துப்பாக்கி படத்தில் நடித்த நடிகை பிகினி உடையில் கொடுத்த போஸை பாருங்களேன்.

- Advertisement -

அதற்கு அந்த நபர் எதுவும் பேசாமல் வாய் அடைத்து போய் எந்த பதிலும் கூற முடியாத அளவுக்கு திகைத்துப் போய் நின்றார். அதுமட்டும் இல்லாமல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா மொழிகளும் தெரியாது. அதனால் தான் நான் அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசினேன் என்றும் கூறினார். மேலும், அந்த நபருக்கு டாப்ஸி கூறிய பதில் அரங்கத்தையே ஆரவாரப்படுத்தியது என்றும் சொல்லலாம். மேலும்,நடிகை டாப்ஸி தென்னிந்திய சினிமா பற்றியும் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் தென்னிந்திய சினிமா படங்கள் தான். நடிப்பு, கேமரா,சினிமா என்றால் என்பதே தெரியாத இருந்த எனக்கு எல்லாத்தையுமே தென்னிந்திய சினிமா படங்கள் தான் கற்றுக் கொடுத்தது.

பாலிவுட்டில் நான் நுழைந்து இவ்வளவு வெற்றிப் படங்களை கொடுப்பதற்கும் தென்னிந்திய சினிமா தான். மேலும், தென்னிந்திய சினிமாவுக்கு நான் என்னுடைய நன்றிகளை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன். எப்போதும் நான் தென்னிந்திய சினிமாவை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.இப்படி அனைவரும் பாராட்டும் படி நடிகை டாப்சி பதிலளித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை பார்த்து பலரும் டாப்ஸிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement