அப்போ நான் ரொம்ப மொக்கையா இருந்தேன். ரொமான்ஸ் பண்றதே கஷ்டம்னு சொல்லிட்டாரு – சூர்யா பற்றி சொன்ன நடிகை.

0
34044
sruthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விஜய் அஜித்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக திகழ்ந்து வருகிறார் சூர்யா. என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வந்தாலும். சூர்யா அடிக்கடி பல்வேறு விமர்சனங்களில் சிக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-
shruthika

இப்படி ஒரு நிலையில் சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படம் பிளாக் பாஸ்டர் பிளாப் என்று அவருடன் நடித்த ஸ்ருத்திகா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். நடிகர் தேங்காய் ஸ்ரீனிவானுக்கு ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் தான் என்பது பலபேர் அறிந்திடாத ஒன்று.நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியின் பெயர் ஸ்ருதி, சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால், முதல் படமே படுதோல்வியடைந்தது.அதன் பின்னர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படஙக்ளில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ஸ்ருதி.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிகா அடையாளம் தெரியாத அளவு ஆளே மாறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், அந்தப் பேட்டியின் போது தொகுப்பாளர் நடிகை ஸ்ருதி காவியம் உங்கள் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக சென்றடைந்தது என்று கூறினார் அதற்கு பதில் கூறிய ஸ்ருத்திகா இதையெல்லாம் சொல்லாதீர்கள் நானே மொக்கையாகத்தான் நடித்தேன்.

நான் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதிலும் ஸ்ரீ படத்தில் நான் மிகவும் மொக்கையாக தான் இருந்தேன் அதனால் என்னுடன் ரோமன்ஸ் செய்ய சூர்யா ரொம்ப கஷ்டப்பட்டார். என்னுடன் ரொமான்ஸ் பண்றதே கஷ்டம்னு சொல்லிட்டாரு என்று படு ஜாலியாக கூறிய சுருதி, நீங்கள் இந்த பேட்டிக்கு நன்றாக தயாரித்து தான் வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது என்று கூறி பங்கமாக தொகுப்பாளரையும் கலாய்த்தார் ஸ்ருதிகா.

-விளம்பரம்-
Advertisement