கண்ணாடி உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ருதி ஹாசன்.! இப்படி கூட ஆடை இருக்கா என்ன.!

0
1849
Shruthi-Hassan

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்ணனி நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் பின்னர் பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.

இதையும் படியுங்க : நடிகருடன் மைனாவிற்கு இரண்டாவது திருமணம்.! மாப்பிளை இவர் தான்.! 

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என்று பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் ஸ்ருதி. ஆனால், சமீப காலமாக அம்மணிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை இதனால் இனையதள தொடர் ஒன்றிலும் நடிக்க துவங்கினர். சமீபத்தில் இவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது.

திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நட்சத்திரங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பட வாய்ப்புகள் இல்லாத போதும் போட்டோ ஷூட்களை மட்டும் நடத்த தவறாமல் இருந்து வருகிறார் ஸ்ருதி.