சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள்.
அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் வாரம் வாரம் சன் டிவி சீரியலுக்கே போட்டியாக சிறகடிக்க ஆசை சீரியல் தான் இருக்கிறது. மேலும், சீரியலில் ஹீரோ முத்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். சிறு வயதிலிருந்தே அம்மாவின் பாசத்திற்காக ஏங்கக் கூடியவர். ஆனால், விஜயாவுக்கு தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை தான் பிடிக்கும். முத்துவை எதிரி போலவே பார்ப்பார். முத்து கார் டிரைவராக இருக்கிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மீனாவின் அப்பா இறந்து விடுகிறார்.
சிறகடிக்க ஆசை குறித்த தகவல்:
பின் அண்ணாமலை, மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார். மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது. அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயானவர் என்பது தெரியாது. இது தெரியாமல் இருப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை ரோகினி செய்கிறார். மூன்றாவது மகன் ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல்.
வித்யா வீடியோ:
மேலும், இந்த சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சுருதி நாராயணன். இந்த சீரியலில் இவர் ரோகினி செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் உறுதுணையாக நிற்கிறார். இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்த்து சிலர் இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள்.
சீரியல் ஸ்ருதி நாராயணன் பதிவு:
இன்னும் சிலர் படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. பின் இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. சரியானதை கண்டுபிடிங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பின் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றி பரவும் வீடியோ மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.
ஸ்ருதி நாராயணன் ஆவேசம்:
இருந்துமேவிடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். அதோடு சிலர், ஸ்ருதி நாராயணனின் instagram பக்கத்தில் வீடியோ லிங்க் அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், நானும் பெண்தான். எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான். அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே ஏன்? என்று ஆக்ரோஷமாக கூறி இருக்கிறார்.