தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. நடிகை சுருதி ஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்த போது கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து இருக்க முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார்.

மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன். இந்த நிலையில் ஸ்ருதி காதலர் காதலை முறித்துக்கொண்டதாக கடந்த ஆண்டு ஏப்ரில் மாதம் அறிவித்து இருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது காதல் முறிவில் இருந்த்து மீண்டு தனது கலைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி ஒரு ஸ்ருதி ஹாசனின் முன்னாள் காதலரான மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.





