டீசரில் விட மெயினில் தான் அதிக ரொமான்ஸ்- வெளியான லோகேஷ்,ஸ்ருதிஹாசனின் ஆல்பம் சாங்

0
202
- Advertisement -

லோகேஷ் கனகராஜ்-ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பாடல் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் அதிக அளவில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவருக்கு சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற குறும்படத்தின் மூலம் தான் தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ்.
இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை என்ற இயக்கி இருக்கிறார் லோகேஷ். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ லோகேஷ் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் பாணியில் இருந்தது. விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் இயக்கும் படம்:

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்டுகான வேலையில் தான் லோகேஷ் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து பணியாற்றி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவரும் கூட்டணியில் படம் உருவாகிறதா? என்று கேட்டிருந்தார்கள். இதை அடுத்து ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் ஆல்பம் பாடல்:

இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்திருக்கிறார். இனிமேல் என இந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலின் வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், கடந்த வாரம் வெளியான இந்த பாடலின் டீசரில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்களுக்கு ஷாக் என்று சொல்லலாம்.

வெளியான பாடல்:

காரணம், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் ஹீரோயின்களை கருணையே இல்லாமல் கொலை தான் செய்வார். தற்போது லோகேஷின் இந்த ரொமான்ஸ் வெர்ஸன் பார்க்கும் போது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த லோகேஷ் கனகராஜ்- ஸ்ருதிஹாசனின் இனிமேல் பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த டீசரில் விட பாடலில் இருவரும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த பாடல் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement