உடம்புல எத்தன பார்ட்ஸ்ஸ Plastic Surgery பண்ணிருக்கீங்க - ரசிகர் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் பதில். (இவ்ளோ ஓப்பான சொல்லிட்டாரே)

By Ajju · 4/4/2022

உடம்பில் எந்தெந்த பாகங்களை எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான் ஸ்ரீதேவி துவங்கி, நயன்தாரா சமந்தா வரை பல முன்னணி நடிகைகள் அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதை படு ரகசியமாகவே தான் வைத்து வருகின்றனர். ஆனால், சுருதி ஹாசன் அப்படி இல்லை.

சுருதி ஹாசன் இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. லாபம் படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது.

இதையும் பாருங்க : Vijay Televison Awards 2022 : புறக்கணிப்பட்ட முக்கிய சீரியல், சிறந்த ஹீரோயின் இந்த நடிகையாம்.

மூக்கு அறுவை சிகிச்சை :

ஆனால்,அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் 12 வருடத்திற்கு முன்னர் இவர் மேடையில் பாடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

நடிகை சுருதி ஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். இதனால் இவரை பலர் கேலி செய்து இருந்தனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய சுருதி ஹாசன், நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கேட்ட ரசிகர் :

நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்று கூறி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ' உடம்பில் எந்தெந்த பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்கள்' என கேட்டுள்ளார்.

ரசிகர் கேள்விக்கு பதில் :

இதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன் 'இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என கூற பின் மூக்கில் செய்ததாக' கூறி இருக்கிறார். சமீப காலமாக நடிகை ஸ்ருதி ஹாசன், பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூட கிசுகிசு எழுந்தது. ஆனால், இதுகுறித்து சுருதி ஹாசன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full