Vijay Televison Awards 2022 : புறக்கணிப்பட்ட முக்கிய சீரியல், சிறந்த ஹீரோயின் இந்த நடிகையாம்.

0
942
Vijay
- Advertisement -

விஜய் டிவியில் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் விருது வாங்கியிருக்கும் தொடர்களின் விருது பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில காலமாக மக்களின் பேவரைட் சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்,நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த அளவிற்கு பல கலைஞர்களை உருவாக்கி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு கவர கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.

இதையும் பாருங்க : போதை மருந்துகளுடன் உல்லாசப் பார்ட்டி – நடிகரின் மகள், எம்.பி மகன், காவல்துறை அதிகாரியின் மகள் உள்பட 125 பேர் கைது.

- Advertisement -

விஜய் டெலிவிஷன் விருது விழா பற்றிய தகவல்:

அதே விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோரும் இந்த விருது வழங்கும் விழாவை விஜய் டிவி நடத்தி வருகிறது.

விஜய் டெலிவிஷன் விருது விழா:

கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடந்து உள்ளது. இந்த விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

விருது வாங்கிய பட்டியல்:

இந்த நிலையில் இதில் சிறந்த சீரியல், சிறந்த நடிகை என்ற விருது யாருக்கு கிடைக்கும்? என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். தற்போது அந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருடம் பெஸ்ட் சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடர் தட்டிச் செல்கிறது. fav on-screen fair என்ற விருதை தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஜோடி நட்சத்திரா மற்றும் வெங்கட் பெறுகின்றனர். மேலும், பெஸ்ட் குடும்பம் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைக்கிறது.

barathi

சிறந்த ஹீரோயினி விருது:

அது மட்டுமில்லாமல் சிறந்த ஹீரோயினி என்ற விருதை பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா வாங்கினார். தற்போது அந்த விருது வாங்கிய புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் டிஆர்பியில் முன்நிலையில் வகிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு விருது கூட வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

Advertisement