நடிகையாகும் முன் மேடையில் பாடிய போது சுருதி ஹாசன் - பிளாஸ்டிக் சர்ஜரிக்கு சிகிச்சைக்கு முன் எப்படி இருந்திருக்கார் பாருங்க.

By Rajkumar · 24/7/2021

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : அட, சார்பட்டா 'டாடி' திமுகவின் இந்த முக்கிய பிரபலத்தின் மருமகன் தானா.

அந்த வகையில் 12 வருடத்திற்கு முன்னர் இவர் மேடையில் பாடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகை சுருதி ஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். இதனால் இவரை பலர் கேலி செய்து இருந்தனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய சுருதி ஹாசன், நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன்.

அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்று கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full