அட, சார்பட்டா ‘டாடி’ திமுகவின் இந்த முக்கிய பிரபலத்தின் மருமகன் தானா.

0
4534
john
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அந்த வகையில் டாடி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் விஜய் கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க :‘சூர்யா பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லல ஜெய் பீம்னு பேர கேட்டதும் சின்ராசு கிளம்பிட்டான் சாதி வெறியன் ரஞ்சித்’ என்று திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

- Advertisement -

நடிகர் ஜான் விஜய் சரத்குமார் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான தலைமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன்பின்னர் இவருக்கு இரண்டாவது படத்திலேயே ஆர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆர்யாவுடன் ஓரம்போ படத்தில் சனகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார் தற்போது 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஆர்யாவுடன் நடித்து இருக்கிறார்.

DMK Lawmaker TKS Elangovan Relieved Of Post Of Secretary

மேலும் இவர் அங்காடித்தெரு தில்லாலங்கடி மௌனகுரு கலகலப்பு என்று தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். சார்பட்டா படம் முழுதும் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது போல பல்வேறு காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அதேபோலத்தான் நடிகர் ஜான் விஜய்க்கும் திமுகவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது நடிகர் ஜான் விஜய்,மாதவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாதவி வேறு யாரும் கிடையாது  தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் மருமகன் தான்.

-விளம்பரம்-
Advertisement