‘டீனேஜ் வயசு பசங்க கூட இப்படி செய்வீர்களா’ – முகம் சுளிக்கும் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதில்.

0
789
sruthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

-விளம்பரம்-

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது வயிற்றில் வளையம் குத்துவது, திருமணம் எப்போது, சிறு வயதினருடன் டேட்டிங் என்று பல எடுக்குமடக்கான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

நடிகை சுருதி ஹாசன் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என்பது பலர் அறிந்த ஒன்று தான். இதனால் இவரை பலர் கேலி செய்து இருந்தனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய சுருதி ஹாசன், நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன்.அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement