தன்னுடைய காதல் தோல்வி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.

அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட ஸ்ருதிஹாசன் பாடி இருந்தார் . இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை.
ஸ்ருதிஹாசன் குறித்த தகவல்:
மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இடையில் சில காலம் சுருதிஹாசனின் நடிப்பில் பெரிதாக படங்கள் எதுவுமே வராமல் இருந்தது.
அதற்குப் பின்னர் இவர் மீண்டும் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் வெளிவந்து இருந்தது. இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருந்தார்.
ஸ்ருதிஹாசன் படங்கள்:
இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் இவர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் வெளிவந்த சலார் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=KB5RgbP2RcA
ஸ்ருதிஹாசன் பேட்டி :
தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் விஜய் சேதுபதியின் டிரெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்ற படத்தில் கேமியோ ரோலில் சுருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய காதல் தோல்வி குறித்து ஸ்ருதிஹாசன் சொன்னது,
நான் ஒரு விஷயத்தை விட்டு விட்டேன் என்றால் திரும்பவும் அது பற்றி கவலைப்பட மாட்டேன்.

ஸ்ருதிஹாசன் காதல் தோல்வி:
அதை நான் என்னால் முடிந்த அளவுக்கு ட்ரை பண்ணி இருப்பேன். ஆனால், மக்கள் இது உனக்கு எத்தனையாவது பாய் ப்ரெண்ட் என்று கேட்கிறார்கள். உங்களுக்கு ஒன்று புரியவில்லை. அது உங்களுக்கு வெறும் நம்பர் தான். ஆனால், எனக்கு அத்தனை தடவை நான் தோற்றுப் போய் இருக்கிறேன் என்பது அர்த்தம். அதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும், இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். அதன் பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால், இதுவும் காதல் தோல்வி என்று கூறப்பட்டது.






