`யாரிந்த சாந்தனு ஹஸாரிகா?’ தன் காதலன் குறித்து ஸ்ருதி ஹாசன் சொன்ன ஆச்சர்யத் தகவல்!

0
862
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது ஹாசன் எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பு சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் . மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
sruthi

அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். ஸ்ருதி ஹாசன் தன் காதலனை அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து கூட வைத்தார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

- Advertisement -

ஸ்ருதிஹாசன் காதல் குறித்து பதிவிட்ட பதிவு:

ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். ஸ்ருதி முறித்துக்கொண்டதாக பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார். ஆனால், காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். அதோடு அவருடன் ஸ்ருதி ஹாசன் ஒன்றாக வசித்து வருகிறார்.

sruthi

ஸ்ருதிஹாசன் காதலன் பற்றிய தகவல்:

மேலும், சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்று குறைப்படுகிறது . இவர் மும்பையை சேர்ந்தவர். அதோடு இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். சமீபத்தில் இவர்கள் திருமணம் குறித்து சாந்தனுவிடம் பயனர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் கூறி இருப்பது,இப்போது தான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வழிகளிலும் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கும் ஒரு ஆக்கபூர்வமான பயணமாகும். நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன் காதலன் பதிவிட்ட பதிவு:

இது உண்மையில் ஊக்கம் அளிப்பதோடு முன்னோக்கி செல்ல உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இது தான் எங்களுக்குள் இருக்கும் உறவு. நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம் என்று சாந்தனு கூறி இருந்தார். இருந்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ருதியின் இன்ஸ்டால் ஸ்டோரி புகைப்பட்டம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஸ்ருதி, சாந்தனு புகைப்படம் தான். அதில் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் போது எடுக்கப்பட்டிருக்கும் செல்பியை சுருதி தன்னுடைய ஸ்டோரில் பகிர்ந்திருக்கிறார்.

புகைப்படம் குறித்து சாந்தனு கூறியது:

இதற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த கேள்வியை கூகுளில் தேடினால் கிடைக்கும் பதில்களுக்கு நான் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறேன் என்று சுருதி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஸ்ருதியை தொடர்ந்து சாந்தனு கூறியது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எங்களுக்குள்ளே முழுமையாகத் தெரியாத ஏதோ ஒரு வகையில் இன்ஸ்பயர் ஆகி கொண்டிருக்கிறோம். ஆனால், மிக நிச்சயமாக இதுதான் எங்கள் கலை ரீதியான ஆர்வத்திற்கும் ஆர்வத்திற்கு அடிப்படையாக உள்ளது. எங்கள் இருவருக்குமே கலையை உருவாக்க பிடிக்கும். அது தான் எங்களை இணைக்கிறது என்று சாந்தனு பேட்டி அளித்திருந்தார். இவர்கள் இவர்களுடைய பேட்டியும் பதிவும் தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement