ஸ்ருதி ஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர்.! இன்ஸ்டாகிராமில் புலம்பிய ஸ்ருதி.!

0
813
Shruthi-Hasan

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் காதலிலும் விழுந்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து இருக்க முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார்.

- Advertisement -

மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன். இந்த நிலையில் ஸ்ருதி காதலர் காதலை முறித்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மைக்கல்.

காதல் முறிவினை தனது தந்தை போல மிகவும் சுலபமாக எடுத்துக்கொண்ட ஸ்ருதி ஹாசன், தனது காதல் பாடத்திற்கு நன்றி. இனி என்னுடைய பட வைப்புகளிலும், இசையிலும் கவனம் செலுத்த போகிறேன் என்று சோகமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement