ஸ்ருதியுடன் என்னை சேர்த்து பேசாதீங்க ! அவர் எங்கே..நான் எங்கே -பிரபல நடிகை அதிரடி !

0
7976
Desha patani

உலக நாயகனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என 3மொழி படங்களிலும் ஒரு காலகட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் இவர் கடைசியாக நடித்த பிரேமம் படத்தின் தெலுங்கு ரேமகில் கூட நடித்து பல விமர்சங்களை பெற்றார்.இவர் கடைசியாக நடித்த சூர்யா வின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.ஆனால் சுந்தர். சி பிரமாண்ட பொருட்செளவில் தயாரித்து வரும் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் பின்னர் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் ஸ்ருதி.

disha-patani

- Advertisement -

தற்போது அந்த படத்தில் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான தோனி படத்தில் நடித்த திஷா பதானி நடிக்கவுள்ளார்.சமீபத்தில் இதனை பற்றி பேட்டியளித்த திஷா நான் சங்கமித்ரா படத்தில் நடிப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. மேலும் நான் இந்த படத்தில் நடிக்கப்போவதால் என்னை ஸ்ருதி ஹாசனுடன் பல பேர் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

ஸ்ருதி ஹாசன் ஒரு மிக பெரிய நடிகை என்னைவிட அனுபவத்தில் சிறந்த அவருடன் என்னை தயவு செய்து ஒப்பிட்டு பேசாதீர்கள் அவருக்கு முன்னாள் எல்லாம் நான் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார்.வளர்ந்து வரும் நடிகையான தீஷா பதானி தன்னை விட அனுபவம் மிக்க நடிகையை மதித்து பேசியது சினிமாவில் உள்ள ஒரு ஆரோக்யமான விஷயம் தான்

-விளம்பரம்-
Advertisement