இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருத்திகா வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் தான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

தற்போது எட்டாவது சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹிந்தி பிக் பாஸ் 18 தொடங்கி இருந்தது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பிரபலம் கலந்து இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லை, நடிகை ஸ்ருத்திகா தான்.
ஸ்ருத்திகா குறித்த தகவல்:
ஸ்ருத்திகா தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணம் இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.

பிக் பாஸில் ஸ்ருத்திகா:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் இவருக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும், குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார்.

ஸ்ருத்திகா அட்ராசிட்டி:
நிகழ்ச்சியில் இவர் ‘சும்மா’ என்ற தமிழ் வார்த்தையை பேசி, யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனார். இருந்தாலும் நிகழ்ச்சியில் தன்னை மீறி ஸ்ருத்திகா ஒரு சில சமயங்களில் தமிழில் பேசி இருந்தார். அதற்கு சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசி இருந்தார்கள். அதற்கு ஸ்ருத்திகாவும் தக்க பதிலடி கொடுத்து இருந்தார். இதனால் ஒட்டுமொத்த இந்தி ரசிகர்களையும் தன் பக்கம் ஸ்ருத்திகா கவர்ந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ருத்திகா வெளியேற்றம்:
சமீபத்தில் நடந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் ஸ்ருத்திகாவின் கணவர் அர்ஜுன், அவருடைய மகனும் சென்றிருந்தார்கள். அந்த எபிசோடு எல்லாம் நன்றாக வைரலாகி இருந்தது. மேலும், கண்டிப்பாக இவர் டைட்டில் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஸ்ருத்திகா வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களை கடந்த நிலையில் இந்த வாரம் மீட் வீக் எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது. அதில் ஸ்ருதிகாவை வெளியேற்றி இருக்கிறார்கள். இது பலருக்குமே அதிர்த்தியை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது சரி இல்லை, ஸ்ருத்திகாவை வெளியேற்றியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டி வருகிறார்கள்.






