தென்னிந்திய சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தா தற்போது லீட் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.. 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சமந்தா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சித்தார்த்தை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது ஊடகங்களிலும் வைரலாக ஆனது.
https://www.youtube.com/watch?v=GkQ2QG2aSd8
2013 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து ஜபர்தஸ்த் எனும் டோலிவுட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்தும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. பின் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நடிகை சமந்தா காதலுக்கு குட்பை சொல்லி இருந்தார்.
இதையும் பாருங்க : சிவா மனசுல சக்தில ஜீவா தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது - கடற்கரையில் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.
அதற்குப் பிறகு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் விளம்பரத்தை கேலி செய்யும் விதமாக சித்தார்த்தின் விளம்பரம் ஒன்று வெளியாகி இருக்கிறது. சமந்தா, கோல்கேட் விளம்பரம் ஒன்றில் நடித்து இருந்தார். அதில் 'இப்போ கேளுங்க உப்பின் ஞானம்' என்று அவர் கொடுத்த ரியாக்ஷன் நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளானது.
https://www.youtube.com/watch?v=mt9XxrIp8lE
இப்படி ஒரு நிலையில் சித்தார்த் டாபர் டூத் பேஸ்ட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் சமந்தா விளம்பரத்தில் கேட்டது போலவே, உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கும் ஒரு காட்சியும் வந்துள்ளது. மேலும், இந்த விளம்பரத்தை பலர் இது சமந்தாவை கேலி செய்வது போலவே இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அந்த விளம்பரத்தை நீங்களே பாருங்க.





