சட்டை பட்டனை கழட்டி சில்லுகருப்பட்டி பட நடிகை கொடுத்த போஸ்.

0
16247
sillukkarupatti
- Advertisement -

கடந்த ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருந்த படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், பேபி சாரா, நிவேதிதா, மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். டிவைன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. ஆனால், இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. 4 மாறுபட்ட வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்ட படம். அந்த காதல் கதை வயதுக்கு தகுந்தாற் போல் இயக்குனர் ஹலீதா ஷமீம் உருவாக்கி உள்ளார். மேலும், இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர்கள் ஒளிப்பதிவு செய்து உள்ளனர்.

-விளம்பரம்-
nivetha

- Advertisement -

பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அன்பு, பாசம், காதல் என அனைத்தையும் அனைத்து வயதினருக்கும் தேவை என்பதை மிக சுவாரசியமாக கூறி உள்ளது. காதலில் தேவைப்படும் நட்பு, இளம் வயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயதில் தேவையான அரவணைப்பு, முதுமை வயதிலும் காதல் அவசியம் என அனைத்தையும் அழகாக குட்டிக் குட்டி கதைகளாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். அதோடு நான்கு கதைகளின் தொகுப்பு, எதார்த்தமான ஒரு பயணம், படத்தின் இசை, வசனங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வயசு பருவத்தின் போது ஏற்படும் காதல், நடுத்தர வர்க்கத்தின் இயந்திரமான குடும்ப வாழ்க்கை.

முதுமைக் காலத்திலும் அன்பிற்காக ஏங்கும் ஏக்கம் என மனிதன் வாழ்க்கையில் தொடக்கம் முதல் இறுதி வரை நடக்கும் காதலை நம் கண்முன் கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர் ஹலிதா சமீம். இந்நிலையில் இந்த இந்த படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா சதீஸ் அவர்கள் தற்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

-விளம்பரம்-
nivetha

2017 ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் என்ற படத்தின் மூலம் தான் நிவேதா சதீஷ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அப்படி எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சில்லுக்கருப்பட்டி நடிகையா?? இது என அதிர்ந்து போய் உள்ளார்கள். தற்போது நிவேதா சதீஸ் அவர்கள் இந்த நிலை மாறும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement