நடிப்பை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி இளம் வயதில் வழக்கறிஞ்சராக மாறிய ஜில்லுனு ஒரு காதல் பட குழந்தை நட்சத்திரம்.

0
660
Shriyasharma
- Advertisement -

சில்லனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கி உள்ளார்கள். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் அவர்கள் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷரியா ஷர்மா.இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் 2005-ம் ஆண்டு சிரஞ்சீவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

- Advertisement -

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஷரியா ஷர்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதற்கு பின் நடிகை ஷரியா ஷர்மா தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டுக்கு பின் இவர் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தனது நடிப்பு வாழ்க்கையைத் தவிர, ஸ்ரேயா ஒரு தீவிர விலங்கு பிரியர் மற்றும் விலங்குகள் நல நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் பல விலங்கு நல அமைப்புகளுடன் தொடர்புடையவர் மற்றும் விலங்கு மீட்பு நடவடிக்கைகளில் தவறாமல்ஈடுபட்டு வருகிறார். விலங்குகள் மீதான அவரது காதல் அவரது சமூக ஊடக பதிவுகளில் தெளிவாகத் தெரிகிறது, அதில் அவர் தனது செல்ல பிராணிகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துவருகிறார்.

இவருக்கு தற்போது 26 வயதாகிறது. இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவரை கண்ட ரசிகர்கள் பலரும் சில்லுனு ஒரு காதல் படத்தில் வந்த குட்டி பொண்ணா இது என்ற அளவு வியந்து போய்யுள்ளனர். தற்போது இவர் சினிமாவை முழுவதும் விட்டுவிட்டாரா இல்லை மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement