- Advertisement -
நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
-விளம்பரம்-
சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்திலும் கதாநாயகியின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், இவர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும், வாலு படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.
- Advertisement -
தற்போது மீண்டும் இசையமைப்பாளராக வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் இஸ்லாம் மதித்திற்கு மாறியுள்ளார்.தனது தந்தை டி ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார்.
Advertisement