விரதம் முடிந்ததும் வெளுத்துகட்டிய சிம்பு. தற்போது எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.

By Rajkumar · 1/1/2020

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'படத்தில் நடிக்கப் போகிறார் என்று தொடர்ந்து இழுபறி இருந்து கொணடே வருகிறது. இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவின் உடல் எடையைக் கண்டு பலரும் கிண்டல் செய்தனர்.

இதை எடுத்து சிம்பு லண்டன் சென்று உடல் எடை சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அதன் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக மாறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு ஒரு புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிம்பு, அருண் விஜய் வைத்த அதே ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். இந்த சிம்புவின் இந்த புதிய லுக்கை கண்டு அவரது ரசிகர்கள் வியந்து போனார்கள்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னரும் கழுத்தில் முன்னாள் காதலரின் டாட்டூ. தற்போது நீக்கி விட்டாரா தீபிகா படுகோன்?

அதே போல நடிகர் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சபரிமலைக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து சமீபத்தில் தான் சபரி மலையில் இருந்து திரும்பினார். சிம்பு விரதம் முடித்தவுடன் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் நடிகர் சிம்பு மீண்டும் எடை கூடி பருமனாக மாறியிருக்கிறார். கடந்த சில மாதத்திற்கு முன்னர் லண்டன் சென்று சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்த சிம்பு தற்போது விரதம் முடிந்ததும் சாப்பாட்டை வெளுத்துக் கட்டி மீண்டும் குண்டாக மாறி இருக்கிறார் என்று பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் லண்டன் சென்று உடல் எடையை குறைத்தது எல்லாம் வீணாய் போய்யுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full