திருமணத்திற்கு பின்னரும் கழுத்தில் முன்னாள் காதலரின் டாட்டூ. தற்போது நீக்கி விட்டாரா தீபிகா படுகோன்?

0
8947
deepika
- Advertisement -

நடிகை தீபிகா படுகோன் அவர்கள் தனது கழுத்தில் முன்னாள் காதலரின் இன்ஷியல் டாட்டூவை வரைந்து இருந்தார். இந்த டாட்டூவை ஆபரேஷன் மூலம் நீக்கி உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்ட்டிங் ஆகி வருகிறது. பாலிவுட் திரையுலகில் நெ.1 நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோன். தீபிகா படுகோன் அவர்கள் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். நடிகை தீபீகா படுகோன் அவர்கள் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for Deepika padukone Ranbir kapoor tattoo

- Advertisement -

சில வருடங்களாக இவர்கள் காதல் தொடர்ந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதையடுத்து நடிகை தீபீகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகர் ரன்பிர் கபூரூம், நடிகை தீபிகா படுகோனும் ஒருவருக்கு ஒருவர் பயங்கர காதலித்து வந்தார்கள்.

நடிகை தீபிகா படுகோன் காதல் மிகுதியால் ரன்பிர் கபூரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து “ஆர்.கே” என்று தனது கழுத்தின் பின் பக்கத்தில் டாட்டூ குத்தி இருந்தார். இந்த டாட்டூ நியூஸ் அப்போது பரபரப்பாகப் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. பின் இவர்கள் பிரிவிற்கு அந்த டாட்டூவை தீபிகா அழிக்கவில்லை. இது குறித்து கேட்ட போது, தீபிகா கூறியது, டாட்டூ குத்தியதில் எனக்கு வருத்தம் இல்லை. அவரை பிரிந்த பின்னும் அதை நான் நீக்க வேண்டும் என நினைக்கவில்லை.

-விளம்பரம்-
Related image

அதை நீக்கும் எண்ணமும் எனக்கு இல்லை என்று கூறி இருந்தார் தீபிகா. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு புடவையில் கலந்து கொண்டார். அப்போது அவர் கழுத்தின் பின் பக்கத்தில் டாட்டூ இல்லாதது தெரிய வந்தது. மேலும், இந்த டாட்டூவை நடிகை தீபீகா படுகோன் அவர்கள் ஆபரேஷன் மூலம் நீக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் நடிகை தீபீகா படுகோன் அவர்கள் ரன்பிரை பிரிந்து விட்டாலும் இன்னும் அவருடன் நட்பைத் தொடர்ந்து தான் வருகிறார் என்று கூறப்படுக்கிறது. மேலும், நடிகர் ரன்பிர் கபூர் அவர்கள் தற்போது பாலிவுட் பிரபலமான நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். அதோடு நடிகை தீபிகா அவர்களின் செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

Advertisement