லண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை.! சிம்பு வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்.!

0
1540
- Advertisement -

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.

-விளம்பரம்-

ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்புவின் உடல் எடை மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்களே சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

- Advertisement -

தற்போது சிம்புவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார் சிம்பு. கடந்த சில வாரங்களாக அங்கேயே தங்கி உடல் எடை குறைப்பிற்கான ஒருவித சிகிச்சையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாநாடு படமும் கை விடப் போவதாக ஒரு சில செய்திகள் வெளியாகின இந்த நிலையில் நடிகர் சிம்பு, நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். மேலும், சமீபத்தில் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் முன்பைவிட கொஞ்சம் ஒல்லியாக இருப்பது போல தோற்றமளிக்கிறார் சிம்பு. எனவே, சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக ‘மாநாடு’ படத்தில் வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement