முன்னாள் காதலி படத்தில் நடிக்கப்போகும் சிம்பு.! வெளியான புகைப்படம்.!

0
654
Simbhu
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா என்று தனது சித்து விளையாட்டை அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டு காதலுமே பிரேக் அப் ஆகிவிட்டது. நயன்தாராவுடன் காதல் முறிந்த பிறகும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது இரண்டாவது காதலியான ஹன்சிகா படத்திலும் நடிக்கப்போகிறார் சிம்பு. ‘மெளனராகம்’ படத்தில் ரேவதியுடன் படம்முழுக்க மோகன் நடித்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கார்த்திக் வேடம், அன்றும் இன்றும் பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.

- Advertisement -

‘மஹா’ படத்திலும் கார்த்திக் பண்ணியதைப்போல மிரட்டலான கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஶ்ரீகாந்த், ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார்.

சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார். சென்னையிலிருந்து இயக்குநர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement