முன்னாள் காதலி படத்தில் நடிக்கப்போகும் சிம்பு.! வெளியான புகைப்படம்.!

By ·

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா என்று தனது சித்து விளையாட்டை அனைவருக்கும் தெரியும். ஆனால், இரண்டு காதலுமே பிரேக் அப் ஆகிவிட்டது. நயன்தாராவுடன் காதல் முறிந்த பிறகும் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இரண்டாவது காதலியான ஹன்சிகா படத்திலும் நடிக்கப்போகிறார் சிம்பு. 'மெளனராகம்' படத்தில் ரேவதியுடன் படம்முழுக்க மோகன் நடித்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கார்த்திக் வேடம், அன்றும் இன்றும் பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.

'மஹா' படத்திலும் கார்த்திக் பண்ணியதைப்போல மிரட்டலான கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஶ்ரீகாந்த், ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார்.

சிம்பு, 'மஹா' படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார். சென்னையிலிருந்து இயக்குநர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full